வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உஷார் - 1000 பேர் கைது
சென்னை: சென்னையில் குண்டுவெடிக்கும் என எச்சரித்து இ மெயில் மிரட்டல் வந்திருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீஸார் தீவிர வேட்டை நடத்தி 1000க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
உ.பியில் நடந்தது போல சென்னை, கொல்கத்தா, மும்பை, காஸியாபாத், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் குண்டுகள் வெடிக்கும், சென்னை கே.கே.நகரில் வருகிற 30ம் தேதி குண்டுவெடிக்கும் என எச்சரித்து டெல்லியில் உள்ள ஒரு டிவி நிறுவனத்திற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு மிரட்டல் இ மெயில் வந்தது.
இதையடுத்து மிரட்டல் மெயிலில் இருந்த அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 437 ரோந்துப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் பலனாக இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரவுடிகள், மற்றவர்கள் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்.
காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனின் நேரடி தலைமையில், கூடுதல் ஆணையர்கள் ஜாங்கிட், சுனில் குமார், இணை ஆணையர்கள் துரைராஜ், ரவி, பாலசுப்ரமணியன், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் சென்னை நகர் முழுவதும் விசிட் அடித்து வேட்டையை மேற்பார்வையிட்டனர்.
இந்த அதிரடி வேட்டையில் 765 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதுதவிர ரெகுலராக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 103 பேரும், பழைய குற்றவாளிகள் 128 பேரும், வாரண்ட் நிலுவையில் உள்ள 16 பேரும் உள்பட மொத்தம் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர இரவில் குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக 68 பேரும், வேகமாக வண்டி ஓட்டி வந்ததாக 8 பேரும் கைது செய்யப்பட்டனர். ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி வந்ததாக 1400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இ மெயில் மிரட்டல் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டதைத் தொடர்ந்தும் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மிரட்டல் இ மெயிலில் உள்ளபடி நடக்காமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார். நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் உடனடியாக பொருத்தப்படவுள்ளன. முதல் கட்டமாக தி.நகர், பாண்டி பஜார், பாரிமுனை ஆகிய பகுதிகளில் இந்தக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
எழும்பூர் ரயில் நிலையம், சென்டிரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் எந்த ரூபத்திலும் ஊடுறுவி விடாமல் தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications