சொத்துக்காக அக்காவை கொலை செய்த தம்பி
திருச்சி: சொத்துக்காக உடன் பிறந்த அக்காவின் மூக்கில் சேற்றை அமுக்கி படுகொலை செய்த தம்பி போலீசில் சரணடைந்தார்.
திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (30). இவரது அக்கா முத்துலட்சுமி (40). கணவருடன் கச்சமங்கலத்தில் வசித்து வந்தார்.
முத்துலட்சுமிக்கு சொந்தமாக அரசன்குடியில் 2 காலி மனைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான பத்திரங்களை அவரின் தம்பி சக்திவேல் வைத்துள்ளார். தனது பெயரில் உள்ள பத்திரத்தை பலமுறை கேட்டும் சக்திவேல் கொடுக்காததால், முத்துலட்சுமி சக்திவேல் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அரசன்குடி வந்து பத்திரங்களை எடுத்து சென்று விட்டார்.
வீடு திரும்பிய சக்திவேல் பத்திரங்களை முத்துலட்சுமி எடுத்து சென்றதை அறிந்து தனது அக்காவின் வீட்டிற்கு ஆத்திரத்துடன் சென்றார். ஆனால் கோபத்தை காட்டினால் பத்திரத்தை வாங்க முடியாது என்று எண்ணி, சமாதானம் பேசியுள்ளார்.
தனது அக்காவிடம், நம் இருவரையும் பிரிப்பதற்காக யாரோ சிலர் சூனியம் வைத்து விட்டார்கள். அதனால் அதை நிவர்த்தி செய்து விட்டால் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லி காட்டுப் பகுதியில் உள்ள சாமியாரிடம் செல்வதற்காக அழைத்து சென்றுள்ளார்.
காட்டிற்குள் செல்லும் போது முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து, அவரின் சேலையை வைத்து வாயை கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஈர மண்ணை எடுத்து தனது அக்காவின் மூக்கில் திணித்தார். இதனால் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார் முத்துலட்சுமி.
அக்காவை கொலை செய்து விட்டு வீட்டிற்கு வந்த சக்திவேல், மன உளைச்சலில் தனது மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications