சங்கரன்கோவில் கோவில் திருவிழாவில் தகராறு, தீவைப்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் பதட்டம் ஏற்பட்டது.
கரிவலம்வந்த நல்லூர் போலீஸ் சரகம் பிள்ளையார்குளம் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 4 கிராம மக்களுக்கு பாத்தியபட்டதாகும். இக்கோயிலில் கடந்த மாதத் திருவிழாவின்போது இரு பிரிவனருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்.டி.ஓ தலைமையில் சாமாதன பேச்சு வார்த்தை நடந்தது. மேலும் நீதி மன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமையன்று கார்த்தீகை தீபத்தை ஓட்டி வீரணாபுரம் கிராம நாட்டாமை வெள்ளசாமி தலைமையில் சுமார் 50 பேர் பிள்ளையார்குளம் வடபத்திரகாளியம்மன் கோயிலில் தீபம் ஏற்ற சென்றுள்ளனர். இதற்கு பிள்ளையார்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் கோயிலுக்கு பூட்டு போட்டு விட்டு மாலை 6 மணிக்கு மேல் யாரும் சாமி கும்பிட கோயிலுக்குள் செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இரு கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் விரைவாக வந்து இரு கிராம மக்களையும் அமைதிப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வீரணாபுரம் நாட்டாமை வெள்ளைசாமி கத்தரிக்காய் லோடை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பஸ்சில் அனுப்ப குலசேகரபேரி சந்திப்பு ரோட்டிற்கு வந்துள்ளார். ஏற்கனவே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறை சுட்டிகாட்டி ஊர் மக்கள் வெள்ளசாமியை தாக்கியுள்ளனர்.
இதைக் கேள்விப்பட்ட வீரணாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் குலசேகரபேரி கிராமத்திற்கு வந்து அங்குள்ள கிணற்று மோட்டார் ரூம், மோட்டாரைஅடித்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் செங்கல் சூலைக்கும் தீ வைத்துள்ளனர்.
இதனால் இரு கிராம மக்களும் மோதிக்கொள்ளும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டது. தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைதிப்படுத்தினர். பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications