ஜெயலலிதாவின் தைரியம்-மார்தட்டும் செங்கோட்டையன்
வேலூர்: ஆந்திர அரசு பாலாறு குறுக்கே அணை கட்டுவதை தட்டி கேட்கும் தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வேலூரில் அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுகிறது. அதை தைரியத்துடன் தட்டிக் கேட்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கு தான் உள்ளது. மத்திய வனத்துறையின் அனுமதியின்றி பாலாற்றில் எப்படி அணை கட்டும் முயற்சி நடக்கிறது. 6ம் தேதி அடிக்கல் நாட்டப்போவதாக வேறு அறிவித்துள்ளனர். இதற்கு ஏன் இன்னும் தடை விதிக்கவில்லை.
அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா பாலாறு பிரச்சனையில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பைகாரா மின் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வர முயன்றபோது, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சுற்றுச் சூழல் பாதிப்பு என காரணம் காட்டி தடுத்தார். இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாதது ஏன். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக் குறியாகிவிட்டது.
காவிரி பிரச்சனையில் பேசி தீர்க்க முடியாது என்பதால் உடனடியாக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே போல வழக்கை விரைந்து நடத்தி பாலாற்றில் அணை கட்ட தடை உத்தரவு பெற வேண்டியது தானே.
தமிழகத்தில் இப்போது 2,700 குற்றவாளிகள், ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தனை நாட்களும் இவர்கள் தமிழகத்தில் நடமாடி வந்துள்ளனர். ஆனால் அரசு இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் செங்கோட்டையன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications