கேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை
கொச்சி:கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்களைத் தொகுத்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுலம் மாவட்டம் சேரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். காங்கிரஸ்காரரான இவர் இளைஞர் காங்கிரஸ் கட்சி 1957ம் ஆண்டு, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதயமானபோது கேரள மாநிலம் சார்பில் அதில் கலந்து கொண்டார்.
இவர் தற்போது தனது 18 வயது (1948ம் ஆண்டு முதல்) முதல் இப்போது வரை உள்ள கால கட்டத்தில் தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்கள், இதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்கள், செய்திகளை சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், புகைப்படங்களை இதுபோல அவர் சேகரித்துள்ளார். இந்த அரிய செயலுக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் ஆபிரகாமின் பெயர் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
மொத்த தொகுப்புகளையும் இணைத்து ஒரு நூலாகவும் இதை அவர் கொண்டு வந்துள்ளார். 480 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல் 4.5 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் கூறுகையில், எனக்கு 78 வயதானாலும் கூட, இன்னும் கூட என்னைப் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்களை தேடித் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் 2ம் பாகத்தைக் கூட நான் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறுகிறார்.
ஆபிரகாமின் இந்த சாதனையைப் பாராட்டி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆபிரகாமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications