சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணிகள் மும்முரம்
சிவகாசி: குட்டி ஜப்பான் என செல்லமாக அழைக்கப்படும் சிவகாசியில் காலண்டர் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. இதையொட்டி காலண்டர்கள், டைரிகள் தயாரிக்கும் பணி சிவகாசியில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பட்டாசுக்கு மட்டுமல்லாமல், அச்சுத் தொழிலிலும் நச்சென்று திகழ்வது சிவகாசி.
ஆண்டுதோறும் இங்கு பட்டாசுத் தயாரிப்பும், அச்சுத் தொழிலும் படு வேகமாக நடந்து கொண்டிருக்கும். தற்போது புத்தாண்டு சீசன் வந்துள்ளதால், காலண்டர்கள், டைரிகள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு புதிய டிசைன்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வண்ண வண்ண காலண்டர்கள் தயாராகி வருகின்றன.
தெய்வங்களின் படங்கள், நடிகர், நடிகையரின் படங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள் என பல்வேறு படங்களுடன் கூடிய மாதக் காலண்டர்கள், தினசரிக் காலண்டர்கள், வருடக் காலண்டர்கள் என விதம் விதமாக அச்சிட்டுத் தள்ளிக் கொண்டுள்ளன சிவகாசி அச்சகங்கள்.
சில்வர், கோல்டு பாயில்ஸ், எம்பாஸ் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில், கலைநயத்துடன் கூடியதாக இந்தக் காலண்டர்கள் தயாராகி வருகின்ரன.
இதுதவிர புதிய வகையாக, பேன்சி டைகட்டிங் காலண்டர் என்ற காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்தர பாலிபோர்ட் காலண்டர் அட்டைகளை பயன்படுத்தி இவற்றை தயாரிக்கின்றனர்.
இந்த காலண்டர்களில் படங்கள் மிகவும் நேர்த்தியாகவும், தத்ருபமாகவும் உள்ளது. இந்த காலண்டர்களில் வருடம் முடிந்தவுடன் அதை கடாசத் தேவையில்லை. மாறாக, அடுத்த ஆண்டிற்கான கேக் சிலிப் (தினசரி கிழிக்கும் பேப்பர் ஸ்லிப்) மட்டும் வாங்கி மாட்டிக் கொண்டால் போதும்.
இந்த வகைக் காலண்டர்களின் விலை ரூ. 30 முதல் ரூ. 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூஸ் அண்ட் துரோ போல இல்லாமல் இருப்பதால், இந்த வகை காலண்டர்களுக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாக காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications