ஆனந்த்துக்கு கிரிக்கெட் கிளப்பின் கெளரவ உறுப்பினர் பதவி
சென்னை: செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்த்துக்கு, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், கெளரவ உறுப்பினர் என்ற புதிய கெளரவத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.
150 ஆண்டு கால வரலாறு கொண்டது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப். இத்தகைய பெருமை கொண்ட மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஆனந்த்துக்கு கெளரவ உறுப்பினர் பதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆனந்த்திடம் கெளர உறுப்பினர் பதவிக்கான அட்டை வழங்கப்படும்.
இதுகுறித்து கிளப்பின் தலைவர் எஸ்.கே.ஏ. மாணிக்கவாசகம் கூறுகையில், இதுபோன்ற கெளரவத்தை முன்பு சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோருக்கும், டென்னிஸ் வீரர் லியாண்டல் பயஸுக்கும் வழங்கியுள்ளோம். முதல் முறையாக செஸ் வீரர் ஒருவருக்கு தற்போது வழங்கவுள்ளோம்.
டிசம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கிளப் உறுப்பினர்களின் குழந்தைகள் 20 பேரோடு அதி வேக செஸ் போட்டியில் ஆனந்த் பங்கேற்கிறார். அவர்களுடன் கலந்துரையாடவும் செய்கிறார்.
அதன் பின்னர் கெளரவ உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் கிளப்பின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்றார் மாணிக்கவாசகம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications