புரோக்கர் உதவியோடு மகனுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்த தாய்
மதுரை: மதுரையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த தாய், மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் மதுரை சுப்பிரமணி-பரமேஸ்வரி தம்பதி. இவர்கள் மதுரை விளாங்குடியில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பாலமுருகன் (23).
பாலமுருகனின் பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரை பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பித்து, பாஸ்போர்ட் வாங்குவது வரை பல சிக்கல்கள் எழுந்தன.
இந் நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த புரோக்கர் ராமலிங்கத்தின் உதவியுடன் பாலமுருகனுக்கு போலியாக பாஸ்போர்ட் தயாரித்தார் தாய் பரமேஸ்வரி.
இந் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற பாலமுருகன் தான் இந்தியன் தான் என்றும், அதற்கான சான்றாக பாஸ்போர்ட்டைக் காட்டியதோடு, தனது பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று தவறாக மாற்றி போடப்பட்டுள்ளதாகக் கூறி, அதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
இந்த மனு மீது கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் பரமேஸ்வரி மகனுக்காக போலியாக பாஸ்போர்ட், பள்ளி சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் பரமேஸ்வரி, அவரது மகன் பாலமுருகன் மற்றும் புரோக்கர் ராமலிங்கம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications