சென்னை தி.நகரில் அனுமதி பெறாத 5வது மாடி இடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தி.நகரில் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
தி.நகரில் சாரங்கபாணி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3 மாடிகளுக்கு மட்டுமே கட்ட அனுமதி வாங்கப்பட்டுள்ளது. ஆனால், 5 மாடிகள் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து 5வது மாடியில் உள்ள அறையை மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
இந்தக் கட்டடத்தில் 4வது மாடி கட்டியதற்கான ஆவணங்கள் கண்காணிப்பு குழுவினரிடம் இருப்பதால் அதை இடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடிக்க ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications