சர்ச்சைப் பகுதிகளை நீக்கும் தஸ்லிமா

சர்ச்சைப் புயலில் சிக்கியுள்ள தஸ்லிமா நஸ்ரின் தற்போது டெல்லியில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாதுகாப்பது தங்களது கடமை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அவர் எழுதிய த்விகாந்தோ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைப் பகுதிகளுக்கு எதிராக முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை முன்வைத்தே கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில் த்விகாந்திதோ நூலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விட நான் தீர்மானித்துள்ளேன். யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. எனது முடிவின் மூலம் நான் இந்தியாவில் அமைதியாக வாழ முடியும் என்று நம்புகிறேன் என்றார் தஸ்லிமா.
தஸ்லிமாவின் இந்த நூல் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், கலவரங்களையும், மோதல்களையும் ஏற்பட வழி வகுத்துள்ளது.
த்விகாந்திதோ நூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 29ம் தேதி தஸ்லிமாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், அடைக்கலம் என்று வந்தவர்கள், அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். வந்த இடத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்தே த்விகாந்தோவின் சர்ச்சைப் பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா முடிவெடுத்ததாக தெரிகிறது.
தஸ்லிமாவின் முடிவு குறித்து ஜமாத் உல் உலமா ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மதானி கூறுகையில், தஸ்லிமா தனது முடிவுப்படி நடந்து கொண்டால் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications