மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் குமாரதாஸ்
சென்னை: அதிமுகவில் கொஞ்ச காலம் இருந்து, ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டிருந்த கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார். நேற்று அவர் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஜனதாக் கட்சியில் இருந்தவர் குமாரதாஸ். பின்னர் அது ஜனதாதளமாக மாறியபோது அதில் இருந்தார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். அதிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அதில் இணைந்தார். பின்னர் தமாகா மீண்டும் காங்கிரஸில் சேர முடிவு செய்தபோது குமாரதாஸ் உள்ளிட்டோர் மட்டும் தொடர்ந்து தமாகாவை நடத்த முடிவு செய்தனர்.
தமாகா என்ற பெயரில் சட்டசபை அளவில் இருந்து வந்த கட்சிக்கு குமாரதாஸ் தலைவராக இருந்தார். பின்னர் சில ஆண்டுகள் முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் குமாரதாஸுக்கு பெரிய அளவில் பதவிகள் தரப்படவில்லை. குமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக குமாரதாஸ் ஒதுக்கி ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவிலிருந்து விலகினார். டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்தார். தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக அறிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைந்தார். இனிமேல் தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸில்தான் இருப்பேன் எனவும், அதிமுகவில் இருந்த 3 ஆண்டு காலத்தையும் அசிங்கமாக நினைப்பதாகவும் குமாரதாஸ் கூறியுள்ளார்.
நாசே. ராமச்சந்திரனும் காங்.கில் ஐக்கியம்
அதேபோல பாஜக முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் நாசே. ராமச்சந்திரனும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications