சென்னையில் 10 தினங்களில் அனைவருக்கும் இலவச டிவி-ஸ்டாலின்
சென்னை: சென்னையில் எல்லாத் தொகுதிகளுக்கும் இன்னும் 10 தினங்களில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் இலவச கலர் டிவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் இலவச கலர் டிவி வழங்கப்படும் என சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்ததும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளன்று இந்த திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 30,000 கலர் டிவிக்கள் சமத்துவபுரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரூ.685 கோடி செலவில் 25 லட்சம் டிவிக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 27ம் தேதி முதல்வர் இலவச கலர் டிவிக்களை வழங்கினார். இதில் சென்னையில் மட்டும் 41,838 பேருக்கு இந்த டிவிக்கள் வழங்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் 3,124 டிவிக்களும், திருவல்லிக்கேணி பகுதியில் 1,937 டிவிக்களும் வழங்கப்பட்டன. இப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் 2,550 டிவிக்கள் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இன்னும் 10 தினங்களுக்குள் 41,838 டிவிக்கள் வழங்கப்பட்டுவிடும்.
3வது கட்டமாக 30 லட்சம் கலர் டிவிக்கள் வழங்க ரூ.780 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டதில் ரூ.162 கோடி அரசுக்கு மிச்சமானது. அந்த பணத்திலும் 4 லட்சத்து 25 ஆயிரம் டிவிக்கள் வாங்கிக் கொடுக்க உள்ளோம். 3வது கட்டமாக 34 லட்சத்து 25 ஆயிரம் டிவிக்கள் வழங்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications