அரியலூரில் கொசு ஒழிப்பு பணியில் 2,000 மாணவர்கள்
அரியலூர்: அரியலூரில் கொசு ஒழிப்புப் பணியில் 2,000 மாணவர்கள் சமூக ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர்.
அரியலூரில் கடந்த சில தினங்களாக மக்கள் சிக் குன்-குனியா, டெங்கு போன்ற நோய்களால் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு பணியில் மாணவர்களை ஈடுபடுத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன் பேரில் கொசு ஒழிப்புப் பணியில் மாணவர்கள் ஈடுபட நகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நகராட்சியின் இந்த அழைப்பை 2,000 பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.
இவர்கள் சுத்தமான நீரில் மட்டும் வாழும் ஏடீஸ் கொசுக்களை அழிக்க அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நகர்மன்ற தலைவர் விஜயலட்சுமி, தனது 7வது வார்டில் கொசு ஒழிப்பு பணியை துவக்கி வைத்தார். அரியலூரில் உள்ள 18 வார்டுகளில் உள்ள 127 தெருக்களில் உள்ள வீடுகளுக்கு தனித்தனி குழுவாக சென்ற மாணவ மாணவிகள் வீடுகளில் உள்ள உடைந்த பாட்டில்கள், டயர், தண்ணீர் தேங்கும் பாத்திரங்களை தேடி தேடி அழித்தனர். இந்த சமுதாய பணியில் மாணவ மாணவிகள் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications