தமிழகத்தில் உர தட்டுப்பாடு-ஜெபுதன்கிழமை, டிசம்பர் 5, 2007
சென்னை: திமுக அரசின் மெத்தனப்போக்கால் விவசாய பணிகளை விவசாயிகளால் முழுமையாக செய்ய முடியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பெய்ததன் விளைவாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வேளாண் பணிகளை துவக்கினாலும், பேக்டம்பாஸ், டி.ஏ.பி போன்ற உரங்கள் கிடைக்காததன் காரணமாக அல்லல்பட்டு வருகின்றனர். உரத்தின் மூலபொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலையேற்றம் காரணாக உர நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துக் கொண்டது தான் இந்த உரத் தட்டுப்பாட்டிற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பயிர் சாகுபடி பருவத்தில் தேவையான அளவு உரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய உர உற்பத்தி மற்றும் உரிய நேரத்தில் அவை வழங்கப்படுவதை கண்காணிக்கின்ற பொறுப்பும், தரக்கட்டுப்பாட்டு ஆணையினை அமல்படுத்துதல் மற்றும் அதன் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை நடைமுறைபடுத்த வேண்டிய பொறுப்பும் மாநில அரசிற்கு நிச்சயமாக உண்டு. இதற்கென்று தனி பிரிவுகள் வேளாண்மைத் துறையில் இயங்கி வருகின்றன.
அதையும் மீறி தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிந்தால் மத்திய அரசின் இருப்பில் இருந்து தமிழகத்திற்குத் தேவையான உரங்களை கேட்டு பெற வேண்டும். இதையெல்லாம் செய்யத் தவறிய திமுக அரசு தற்போது பிரச்சனை பூதாகரமாக வெடித்தவுடன், உரத்தை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
சிமெண்ட் இறக்குமதி என்ன கதியை அடைந்ததோ அதே கதி தான் உர இறக்குமதியும் அடையப் போகிறது என்பதை விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பயிர்க் கடனும் நிறுத்தப்பட்டு, உரங்கள் வழங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். திமுக அரசின் மெத்தன போக்கால் விவசாய பணிகளை விவசாயிகளால் முழுமையாக செய்ய முடியவில்லை. தமிழக அரசு இறக்குமதி செய்து வருவதற்குள் நெற்பயிர் நடவுக்காலம் முடிந்து, நெல் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், அரிசி பற்றாக்குறையும் ஏற்படும்.
இதன் மூலம் விவசாயிகள், நுகர்வோர்கள் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுவர்.
திமுக ஆட்சியில் ரேஷன் அரிசிக் கடத்தல் தொழில் அமோகமாக நடக்குமளவுக்கு ரேஷன் அரிசி விநியோகம் தமிழகத்தில் நடைபெறவில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கிராம புறங்களில் மக்கள் பலமுறை அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோவுக்கும் குறைவாகவே அரிசி வழங்கப்படுகிறது.
இது தவிர, வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதை மாற்றி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்று திமுக அரசு அறிவித்ததால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இருக்கும் அதிகப்படியான ரேசன் கார்டு தாரர்கள், ரேசன் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கருணாநிதி, விவசாயிகளுக்கு உரங்கள் தடங்கலின்றி கிடைக்கவும், நெல்லுக்கு ஆதரவு விலையா ரூ.1,000 என உயர்த்தித் தரக்கோரியும் மத்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும்.
பயிர்க் கடன்களை உடனடியாக வழங்கவும், அனைவருக்கும் தரமான ரேசன் அரிசி வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications