பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு-800 பேர் கைது
சென்னை: நாளை (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து நகர்களிலும், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும், இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷ்னர்கள் ரவி, பாலசுப்பிரமணியன், துரைராஜ் ஆகியோரின் நேரடி மேற்பார்வை அனைத்து துணை கமிஷ்னர்களும் நேரடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்கள் ஆகிய மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான 35 செக்போஸ்ட்டுகள் தவிர கூடுதலாக மேலும் 15 செக் போஸ்ட்டுகள் சென்னையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
பழைய குற்றவாளிகள், வன்முறையைத் தூண்டுவோர் என சுமார் 800 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்கள், மேம்பாலங்களிலும் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
தலைமைச் செயலகம், துறைமுகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே போல கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகர்கள் அனைத்திலும் சோதனைகள் தீவிரமாகியுள்ளன.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications