ஆதி பராசக்தி படத்தில் பாம்பு - மக்கள் பரவசம்!
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிபராசக்தி சாமி படத்தில் பாம்பு உருவம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் பரவசத்துடன் படத்தையும், பாம்பையும் பார்த்து வணங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ரோட்டில் வசித்து வரும் பாண்டியன்-ராணி தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இதற்காக வீட்டில் தனி பூஜையறை அமைத்து அதில் பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் அம்மனை வழிபடுவது போன்ற போட்டோவை வைத்துள்ளார்.
நேற்று முன் தினம் மாலை 6.45 மணியளவில் ராணி பூஜை செய்து கொண்டிருந்த போது அம்மன் போட்டோவில் திடீரென்று பாம்பு போன்ற உருவம் தோன்றியது. அதன் அருகில் திரிசூலமும், மஞ்சள் குலையும் போன்று காட்சியளித்தது. இதைப்பார்த்த ராணி ஆச்சரியம் அடைந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஆதிபராசக்தி மன்றத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் தலைவி மைதிலி மற்றும் மன்ற குழுவை சேர்ந்த பெண்கள் அங்கு வந்து பார்த்தனர். இந்த செய்தி காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதை தொடர்ந்து பொது மக்கள் திரண்டு வந்து பார்த்து சென்றனர்.
இதுகுறித்து ராணி கூறும் போது, நாங்கள் கடந்த 10 வருடங்களாக மேல்மருவத்தூர் அம்மனை வீட்டில் வைத்து பூஜித்து வருகிறோம். ஞாயிற்றுகிழமை மாலை பூஜை செய்தபோது அந்த அற்புத காட்சி தோன்றியது. இதைப்பார்த்த நாங்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்தோம்.
3 நாட்களாக பாம்பு வடிவ காட்சி மறையாமல் அப்படியே இன்றுவரை உள்ளது. எங்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இன்னும் சில நாட்கள் கழித்து நாங்கள் அந்த போட்டோவை மேல்மருவத்தூர் கோயிலுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். கடந்த 5 நாட்களுக்கு முன் என் சங்கரம்மாள் பூஜை அறையில் இருந்த மேல்மருவத்தூர் அம்மன் படத்தில் பாம்பு உருவம் தெரிவதாக கூறினார். ஆனால் நாங்கள் நம்பவில்லை. இப்போதுதான் அது உண்மை என தெரிய வருகிறது என்றார்.
அம்மன் படத்தில் பாம்பு உருவம் தெரியும் காட்சியை பார்ப்பதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆதிபராசக்தி மன்ற குழுவினர் ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications