காதலித்து கம்பி நீட்டியவருக்கு 'காப்பு'!
நாமக்கல்: நாமக்கல்லில் அப்பாவி பெண் ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ராஜாமணி. இவர் நாமக்கல்லில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அதே நிறுவனத்தில் நீலகிரி மாவட்டம் உழிக்கல்லலை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற வாலிபரும் வேலை செய்து வந்தார்.
இருவருக்கும் காதல் மலர்ந்தது. விழிகள் காதல் மொழி பேச, விரல்கள் கவிதை பாட, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
இதை அறிந்த அந்த கூரியர் நிறுவனம் இருவரையும் வேலையை விட்டு நீக்கி விட்டது. இதனால் ராஜாமணியை பிரிய மனம் இல்லாத ஈஸ்வரமூர்த்தி நாமக்கல்லில் தனி வீடு எடுத்து அவரை தங்க வைத்து கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ராஜாமணி கர்ப்பம் ஆனார்.
நாட்கள் நகர்ந்த நிலையில், முறைப்படி தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஈஸ்வரமூர்த்தியை வற்புறுத்தினார் ராஜாமணி. முதலில் சம்மதம் தெரிவித்த ஈஸ்வரமூர்த்தி கடைசியில் மறுத்துவிட்டாராம்.
இதனால் ராஜாமணி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்ற ஈஸ்வரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications