இனவெறியுடன் நான் நடந்து கொள்ளவில்லை - மலேசிய பிரதமர்

கோலாலம்பூர்: எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் மற்றும் முஸ்லீம் அல்லாத இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நான் இனப் பாகுபாடு காட்டுவதாக கூறுவது தவறானது என்று மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் இனத்தவரோ அல்லது முஸ்லீம் சமுதாயத்தினரோ அல்ல. எனவே நான் இன வெறியுடன், மத வெறியுடன் நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
முன்பு நான் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் மலேசியாவின் அமைப்பு குறித்து உலக நாடுகள் சரியாக புரிந்து கொள்ளாத நிலையை உணர முடிந்தது. மேலும் மலேசிய அரசியல் குறித்தும் தவறான கருத்து வெளிநாடுகளில் நிலவுவதையும் அறிய முடிந்தது.
மலேசிய ஆளுங்கட்சியின் அதிகாரப் பகிர்வு குறித்த முழுமையான, உண்மையான நிலையை உலக நாடுகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அப்படிப்பட்ட அரசியல், அதிகார அமைப்புகள் அந்த நாடுகளில் இல்லாததே.
தங்களது குறைகளை விளக்கும் முகமாக பேரணி நடத்தப் போவதாக நவம்பர் 15ம் தேதி இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு அறிவித்தது. ஆனால் அது சட்ட விரோதம் என அரசு எச்சரித்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் பேரணியை நடத்தினர். இதுதொடர்பாக 31 பேரை கைது செய்துள்ளோம்.
நாங்கள் இனப்படுகொலை செய்வதாக இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டுகிறது. இது மிகவும் தவறானது. எனது அமைச்சரவையைப் பாருங்கள். அதில் பாதிப் பேர் மலாய் இனத்தவர்கள் கிடையாது, முஸ்லீம்கள் கிடையாது, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது.
ஒரு நாடு பிரச்சினையை சந்திக்கும்போது யாருக்கும் வெற்றியும் கிடைக்காது, தோல்வியும் கிடைக்காது. மாறாக அந்த நாடு முழுமையும் பாதிப்படையும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனால்தான் நாட்டை அமைதியாக வைத்திருக்க சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிட்டது.
மலாய் இனத்தவர்களுக்கும், மற்ற இனத்தவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. அது கெட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை. அது தொடர வேண்டும், அனைவரும் இணக்கமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றார் படாவி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications