ராமர் என்று யாரும் வாழ்ந்ததில்லை-புத்ததேவ்
கொல்கத்தா: ராமர் என்று யாரும் வாழ்ந்ததில்லை. கவிஞர்களின் கற்பனை பாத்திரம் தான் ராமர் என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடந்த கண்டன கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ராமர் என்று யாரும் வாழ்ந்தது கிடையாது. கவிஞர்களின் கற்பனை பாத்திரம் தான் ராமர்.
கடலில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலமும் உண்மை கிடையாது. இது இயற்கையாக அமைந்தது தான். பொருளாதார வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் வழி வகுக்கும். ஆனால் அதை மதக் காரணங்களை காட்டி சங்பரிவார் அமைப்புகள் எதிர்க்கின்றன என்றார்.
பாஜக கண்டனம்:
புத்ததேவின் பேச்சுக்கு மேற்கு வங்க பாஜக செயலர் ராகுல் சின்கா கூறுகையில், நந்திகிராம வன்முறையில் மார்க்சிஸ்ட் அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் முஸ்லிம்களின் ஆதரவை பெறும் நோக்கில் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று புத்ததேவ் கூறுகிறார்.
அவர்களுக்கு காரல் மார்க்சும், ஸ்டாலினும் தான் தெரியும். சுவாமி விவேகானந்தரை கூட போலி சாமியார் என்று சொல்வார்கள். இந்தியா மீது கம்யூனிஸ்ட்களுக்கு பற்று கிடையாது. அவர்களுக்கு ரஷ்யாவும், சீனாவும் தான் முக்கியம் என்றார் சின்கா.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications