மணல் திருடிய ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே மணல் திருடிய ஊராட்சி மன்ற தலைவருக்கு கோட்டாட்சியர் அபராதம் விதித்தார்.
கும்பகோணத்தை அடுத்துள்ள மலையப்பநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சங்கர். இவர் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வருவாக பரவலாக புகார் எழுந்தது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள அரசலாற்றில் முறையான அனுமதி இன்றி மணல் திருடியதாக கும்பகோணம் கோட்டாட்சியருக்கு புகார் வந்தது.
இது குறித்து ஆய்வு நடத்த கும்பகோணம் கோட்டாச்சியர் தேவராஜ், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் மலையப்பநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சங்கர் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கு அரசு அனுமதியின்றி 27 லாரிகளில் மணல் எடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் சங்கருக்கு கும்பகோணம் கோட்டாச்சியர் தேவராஜ் ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்தார்.
ஆனால் சங்கர் அபராத தொகையை செலுத்த மறுத்ததுடன், தனக்கு நீதி வேண்டி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications