ஸ்ரீரங்கம் கோவில் தூணை இடித்து தள்ளிய சென்னை வேன்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: சென்னையிலிருந்து, ஸ்ரீரங்கத்திற்கு வந்த சென்னையைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன், ரங்கநாதர் கோவில் தூணில் மோதியதால் தூண் இடிந்து விழுந்தது.
ஸ்ரீங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள மேலவாசல் மொட்டைகோபுரம் மிகவும் பழமை வாய்ந்தது. 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நுழைவு வாயில் கோபுரத்தில் சுமார் 12 அடி உயரத்துக்கு 4 தூண்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று சென்னையிலிருந்து அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஸ்ரீரங்கம் வந்த அய்யப்ப பக்தர்கள் வேன் இந்த நுழைவு வாயிலில் வந்தபோது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தூணில் மோதியது.
இதில் தூண் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கோவில் அதிகாரிகள், வேனைப் பிடித்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications