மோடிக்கு எதிராக போராட்டம் - 24 துறவிகள் கைது
Subscribe to Oneindia Tamil
வடோதரா: வடோதராவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய 24 துறவிகள் கைது செய்யப்பட்டனர்.
வடோதராவில் உள்ள மகாத்மா காந்தி க்ருஹ் என்ற இடத்தில் கூடிய இந்த சாதுக்கள், மோடிக்கு எதிராக கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மோடியின் கொடும்பாவியையும் எரிக்க முயன்றனர்.
இதையடுத்து அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அயோத்தியைச் சேர்ந்த அகில பாரத சாது சந்த் சமாஜ் பொதுச் செயலாளர் டாக்டர் தேவேந்திர திபன்சு தாஸ் தலைமை வகித்தார்.
குஜராத்தில் சாதுக்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மோடி தவறி விட்டார் என்று குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக சாதுக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications