கொல்கத்தா-டெல்லி ரயில் தடம் புரண்டு ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரம்மபுத்திரா ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார், மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த அந்த ரயில் மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பாய்குரி என்ற இடத்துக்கு அருகே நேற்றிரவு 11 மணிக்கு தடம் புரண்டது. 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிட்டன. இதில் 5 பெட்டிகள் கவிழ்ந்து அருகே உள்ள பெரிய கால்வாயில் விழுந்தன.
என்ஜினை ஒட்டி இருந்த 3 பெட்டிகள் தவிர மீதமிருந்த பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பயணி உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏசி பெட்டி தான் மிகுந்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 70 பேரில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மேற்கு வங்கத்தின் வடக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications