நான் மோடியை பற்றி பேசவில்லை-சோனியா காந்தி
டெல்லி: மரணத்தின் வியாபாரி என நான் குறிப்பிட்டது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அல்ல என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத்தில் பிரசாரத்தில் பேசிய மோடி போலி எண்கெளன்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசியதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி நவ்சரி என்ற இடத்தில் பேசும் போது மரணத்தின் வியாபாரி (மவுத் கா சவ்தாகர்) என்று பேசினார். ஒரு முதல்வர் குறித்து சோனியா மிகத் தவறாகப் பேசிவிட்டதாக தேர்தல் ஆணையரிடம் பாஜக புகார் கொடுத்தது.
இதையடுத்து சோனியாவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி,
நான் மரண வியாபாரி என்று குஜராத் நிர்வாகத்தைத் தான் சொன்னேன். எந்தவொரு தனிப்பட்ட நபரையும் நான் குறிப்பிட்டு அந்த வார்த்தையை சொல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் பிரசாரத்தின் போது மோடியை இந்து தீவிரவாதி என்று பேசியிருந்தார். இது குறித்து விளக்கம் அளிக்க அவர் இன்று தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எழுத்து மூலம் விளக்கம் அளித்தார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications