நாகர்கோவில்-பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடி!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பெண்ணின் நைட்டியை கிழித்து அவரை கற்பழிக்க முயன்ற பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில், வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நேசகுமார். இவரது மனைவி சுஜி.
சுஜி வீட்டில் சமையல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும் போது அப்போது அங்கு வந்த வில்லுக்குறியை சேர்ந்த நாகராஜன் என்ற வில்லுக்குறி நாகராஜன் மற்றும் முருகன் ஆகியோர் சுஜியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.
அப்போது சுஜியின் வாயில் துணியை அமுக்கி அவரது நைட்டியை கிழித்து நாகராஜன் மானபங்கபடுத்த முயன்றார். அவர் திமிறி கூச்சல் போட்டார்.
இதனையடுத்து நாகராஜன் சுஜியிடம், எனது தம்பி ஜெயக்குமாரை இரணியல் போலீசில் பிடித்துக் கொடுத்த உன்னையும், உன் கணவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி மிரட்டி விட்டு 2 பேரும் ஓடி விட்டனர்.
இதுதொடர்பாக சுஜி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
இதில் வில்லுக்குறி நாகராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications