ஆலடி அருணா 'புகழ்' எஸ்.ஏ.ராஜா மீது குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்

வள்ளியூர்: ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜாஸ் கல்வி நிலையங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாவையும் அவரது மனைவியையும் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் எஸ்.ஏ.ராஜா. இவர் வடக்கன்குளம், காவல்கிணறு, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் நடத்தி வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா படுகொலையில் ராஜா மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கொலையில் கைது ெசய்யப்பட்ட ராஜா ஜாமீனின் வெளியில் திரிந்து வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை ராஜாவும், அவரது மனைவி சோபியாவும் வள்ளியூரில் உள்ள ஆலயத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது 2 அம்பாசிடர் கார்களில் வந்த நபர்கள் ராஜாவின் கார் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் ராஜாவின் கார் டிரைவர் பலத்த காயமடைந்தார். ராஜாவும் அவரது மனைவியும் தப்பிவிட்டனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த டிரைவரை நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே குண்டு வீசிய நபர்கள் சென்ற கார்களைப் பிடிக்க போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அந்தக் காரை சில போலீசார் பைக்குகளில் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜா மீதான தீர்ப்பு வர உள்ள நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications