லியாகத் அலி ஜாமீன் மனு நாளை விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமண இணையத் தளங்களில் பல்வேறு போலிப் பெயர்களில் விளம்பரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் மோசடி செய்து, 30க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து, பல பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்த மோசடி மன்னன் லியாகத் அலிகான்.
கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லியாகத் அலி ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் 3 மாதமாக நான் காவலில் இருக்கிறேன். போலீசார் என் மீது இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. வேண்டுமென்றே வழக்குப்பதிவு செய்து காவலில் வைத்துள்ளனர். எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கருணா ஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீது விசாரணையை நாளைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.













Click it and Unblock the Notifications