காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை - கடல் கொந்தளிப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் நல்ல மழை இருக்கும் எனவும் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவிரி மாவட்டங்களில் பலத்த மழை:
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் அது பலத்த மழையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில், 135 மில்லிமீட்டர் மழையும், சீர்காழியில் 130 மில்லிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 129 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நாகப்பட்டனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடியக்கரையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா?












Click it and Unblock the Notifications