முஷாரப் மீது பாக். மக்கள் கடும் வெறுப்பு: கருத்துக் கணிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அதிபர் பதவியில் நீடிப்பதை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் விரும்பவில்லை. மேலும், அவரது ஆதரவு பெற்ற கட்சியையும் அவர்கள் அடியோடு வெறுப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச குடியரசுக் கழகம் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 67 சதவீதம் பேர் முஷாரப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர். 56 சதவீதம் பேர் ஆட்சி நிர்வாகத்தில் ராணுவம் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வாக்களிப்போம் என 30 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு 25 சதவீதம் பேரும், 23 சதவீதம் பேர் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ பிரிவு) கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தவறானது. இனிமேலும் அப்படி ஏற்படக் கூடாது என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெனாசிர், நவாஸ் ஷெரீப் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சேர்ந்து மாபெரும் கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வாக்களர்கள் நாட்டின் தற்போதைய நிலை குறித்து கோபத்துடன் உள்ளதும், முஷாரப் மீது வெறுப்புடன் இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு பேர் மட்டுமே முஷாரப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பெனாசிரும், நவாஸ் ஷெரீப்பும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காவிட்டால், ஜனவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications