காதலியை மணக்க மாலையைத் துறந்த ஐயப்ப பக்தர்
மதுரை: காதலியை மணப்பதற்காக, போட்டிருந்த மாலையைக் கழற்றி விட்டு, காவல் நிலையத்தில் காதலியுடன் அடைக்கலம் புகுந்தார் ஐயப்ப பக்தர். பின்னர் கோவிலில் வைத்து இருவரும் கல்யாணமும் செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் ேசர்ந்தவர் செல்வம் (24). விவசாயிக் கூலியான இவருக்கும், நத்தம் அருகே உள்ள பரளிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கற்பகம் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஆனால் இருவரும் வேறு வேறு சாதியைச் ேசர்ந்தவர்கள் என்பதால் வீட்டினர் கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும் இருவரும் காதலைக் கைவிடவில்லை.
இந் நிலையில் சபரிமலைக்குப் போவதற்காக மாலை போட்டிருந்தார் செல்வம். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வத்தை சந்தித்த அவரது காதலி கற்பகம், தன்னை வேறு யாருக்கோ கட்டி வைக்க வீட்டில் முயற்சிப்பதாக கூறினார்.
இதையடுத்து செல்வம், மாலையைக் கழற்றி விட்டு காதலியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார். போலீஸாரின் உதவியுடன் அருகில் உள்ள கோவிலில் வைத்து செல்வம்-கற்பகம் திருமணம் நடந்தது.
மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காதல் கல்யாணம் செய்து வைப்பதில் சுத்துப்பட்டு கிராமங்களில் ரொம்ப பாப்புலராம். செல்வம்-கற்பகம் கல்யாணம், இந்தக் காவல் நிலையம் செய்து வைத்த 100வது காதல் கல்யாணமாம்.
காவலுக்கு ஜே.. காதலுக்கு ஜே. ஜே..!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications