பாலக்காடு ரயில் கோட்டம் மீண்டும் பிரிப்பு
பாலக்காடு: பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மீண்டும் பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மங்களாபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளை உள்ளடக்கிய பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து இந்தப் பகுதிகளைப் பிரித்து புதிய சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்தன. இறுதியில் பொள்ளாச்சியை கேரளாவுக்குக் கொடுத்து விட்டு திட்டமிட்டபடி சேலம் கோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலக்காடு ரயில்வே கோட்டம் மீண்டும் பிரிக்கப்படவுள்ளது.
கேரளாவின் கண்ணணனூர் மாவட்டத்திற்குள் அடங்கியுள்ள செருவத்தூரிலிருந்து மங்களாபுரம் ரயில் நிலையம் வரையுள்ள 80 கிலோமீட்டர் பகுதியை பாலக்காட்டிலிருந்து பிரித்து மங்களாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோட்டம் அமையவுள்ளது.
இந்தப் புதிய கோட்டத்துடன், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஹசன் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளும் இணைக்கப்படவுள்ளன.
இந்தப் புதிய கோட்டம் குறித்து சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மத்திய அரசு இந்தப் புதிய கோட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டதாம். இருப்பினும், கர்நாடகப் பகுதிகளை மங்களாபுரம் கோட்டத்துடன் இணைக்க கர்நாடகத் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்ப்பு வரலாம் என்று தெரிகிறது. மேலும் பாலக்காடு கோட்டத்தினரும், மேலும், சில பகுதிகளை இழக்க முன் வருவார்களா என்றும் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications