தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பதா-ஜெ கேள்வி

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் முதல்வர் கருணாநிதியை, தீவிரவாதம் தொடர்பான முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு அழைத்திருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார். அப்படிப்பட்டவர், தீவிரவாதத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதியற்றவர் ஆவார்.
இந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்வது அவமானச் செயலாகும். கருணாநிதி கலந்து கொள்வது தவறு என்றால், மத்திய அரசு அவருக்கு அழைப்பு விடுத்தது அதை விடப் பெரிய தவறாகும். இந்த மாநாட்டுக்கு கருணாநிதியை மத்திய அரசு அழைத்திருக்கக் கூடாது.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், ஒடுக்கவும் பொடா சட்டம்தான் சரியானதாகும். எனவே பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, பொடா சட்டத்தை ரத்து செய்து விட்டது. இதனால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்து விட்டனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வர் கருணாநிதிதான் வெளியிட்டுள்ளார்.
எனவே உடனடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications