மதுரையில் 170 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் தனியார் ஆலையிலிருந்து 170 மூட்டை ரேஷன் அரிசியை சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கடத்தல் ரேஷன் அரிசி சிக்கி வருகிறது. இந்த நிலையில், மதுரை அருகே தனியார் ஆலை ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளைஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் போலீஸ் உதவியுடன் குறிப்பிட்ட அரிசி ஆலை கிட்டங்கியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8,500 கிலோ எடையுள்ள 170 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் முருகன் என்பவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications