ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் விடிய விடிய போராட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரத்தினம்மாள் தலைமை வகிக்க, துணைத் தலைவர் மணிகண்ட ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் முருகேசராஜா எழுந்து, அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் மணிகண்டராஜா அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டதால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக கூறி விட்டு நகர சபை தலைவர் ரத்தினம்மாள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
ஆனால் நகரசபை தலைவர் ரத்தினம்மாள் தொடர்ந்து கூட்டத்தை நடத்தவேண்டும் என்றும், தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் வெளியே சென்றதை கண்டித்தும் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் நகர சபை உள்ளே இருந்து கொண்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த சந்திரா எம்எல்ஏ மற்றும் தாசில்தார் ஆதிநாராயணன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இல்லையெனில் இந்த போரட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டோம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறினர். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இந் நிலையில் அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications