மீண்டும் ஆஸி. திரும்புவாரா ஹனீப்? வெள்ளிக்கிழமை தெரியும்
மெல்போர்ன்: இந்திய டாக்டரும், தீவிரவாதி என சந்தேகத்திற்கு ஆளாகி சிறை சென்று மீண்டவருமான முகம்மது ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி பணியாற்ற அனுமதிப்பது தொடர்பான உத்தரவை வெள்ளிக்கிழமை பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம் அளிக்கவுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட சபீல் அகமது மற்றும் கபீல் அகமது ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார் ஹனீப். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் விசாரணையில் அவருக்கும், கபீல் சகோதரர்களுக்கும் இடையே உறவினர்கள் என்ற தொடர்பைத் தவிர தீவிரவாத தாக்குதலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் ஹனீப்பின் பணி விசாவை ரத்து செய்த அப்போதைய ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட்டில் பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முழு பெஞ்ச் முன்பு ஆஸ்திரேலிய அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மைக்கேல் பிளாக் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பு வருகிற வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. எனவே ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி பணியாற்ற முடியுமா என்பது வெள்ளிக்கிழமை தெரிய வரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications