நாடாளுமன்றம், தாஜ்மஹால், உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: நாடாளுமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், தாஜ்மஹால் ஆகியவற்றை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக அல் கொய்தாவிடமிருந்து இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு ஒரு இ மெயில் வந்துள்ளது. அதில், டெல்லி உயர்நீதிமன்றம், நாடாளுமன்றம், தாஜ்மஹால் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அல் கொய்தா அமைப்பிலிருந்து இந்த இ மெயில் வந்துள்ளது.
இந்தத் தகவல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரிவிக்ப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற துணைப் பதிவாளர் கிரீஷ் சர்மா கூறியுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு இந்த இ மெயில் வந்ததாம்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை ஆணையர் தாட்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நீதிமன்ற அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீஸ் ஹஸாரி நீதிமன்றம் உள்ளிட்ட டெல்லியில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் தவிர டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications