நக்சலைட்டுகளை ஒடுக்க மாநிலங்களில் தனிப்படை - பிரதமர் யோசனை
டெல்லி: நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க ஒவ்வொரு மாநில அரசும் தனி அதிரடிப்படையை உருவாக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இடதுசாரி தீவிரவாதம் வைரஸ் போல பரவி வருகிறது. தீவிரவாதத் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க புலனாய்வு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நக்சலைட்டுகளின் அட்டகாசம் பல மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இடதுசாரி தீவிரவாதம்தான் நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என நான் முன்பே தெரிவித்துள்ளேன். இப்போதும் அதே எச்சரிக்கையை விடுக்கிறேன். இது வைரஸ் போல பரவி வருகிறது. இதைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவரை ஓய முடியாது.
நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசுள் அமைக்கும் அதிரடிப்படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
நக்சலைட் வேட்டையின்போது மாநில அரசுகள் இணைந்து செயல்படலாம். தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அப்பாவி மக்களை நக்சலைட்டுகள் கொல்வதும், பணம் பறிப்பதும், கடத்துவதும் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்றார் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications