ஜெ. மீதான வழக்கு: பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil


புதுக்கோட்டை: புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கு பிப் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய இயலும். ஏற்கனவே இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தை மறைத்து புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் மனு செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக எம்பி குப்புசாமி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி கோட்டாட்சியர் மோகன் கடந்த ஜூலை மாதம் 9 ம் தேதி புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்தார்.

ஆனால் ஜெயலலிதா, தன் மீது வழக்கு தொடர வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காலம் கடந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதி மன்றங்களில் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் அலுவலர் கருப்பையா ஆஜர் ஆனார். அதிமுக சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்ைல.

இதையடுத்து வழக்கை மாஜிஸ்திரேட் பத்மநாபன் பிப்ரவரி 20 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்திரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+