விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு - இளங்கோவன் கவலை
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது கவலை தருவதாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
அமைச்சர் இளங்கோவனுக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். இதையொட்டி இன்று சென்னையில் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிரித்து விட்டது. இதைத் தடுக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே ரவுடிகள் அட்டகாசத்தையும், தீவிரவாதிள் நடமாட்டத்தையும் முதல்வர் கருணாநிதி இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என எதிர்பார்க்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து விடுதலைப்புலிளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வரவும், காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும் கட்சித் தொண்டர்கள் அயராது பாடுபட்டுக் கொண்டுள்ளனர். அது நிச்சயம் நிறைவேறும் என்றார் இளங்கோவன்.
முன்னதாக இளங்கோவனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக துணைத் தலைவர் குமாரவேலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், எம்.எல்.ஏ வசந்தகுமார், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தனது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் பிரமாண்ட கேக்கையும் வெட்டினார் இளங்கோவன். 200 பெண்களுக்கு இலவச சேலைகளையும் அவர் வழங்கினார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications