Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரண தண்டனையே தேவையில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil


சென்னை: மரண தண்டனை வேண்டாம் என்பதே எனது கருத்து. மரண தண்டனைக்கு எதிரானவன் நான் என்று என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கருணாநிதி கூறுகையில், தமிழகத்தின் மின் பற்றாக்குறை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் தெரிவித்து, 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்ேதன்.

இதை பரிசீலித்த மத்திய அரசு உடனடியாக 300 மெகாவாட் மின்சாரத்தை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மத்திய பல்கலைக்கழகம் ஒன்றையும், இந்திய நிர்வாகவியல் கழகத்தையும் நிர்மாணிக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

11வது திட்ட காலத்தில், தமிழக அரசின் திட்டங்களுக்கு ரூ. 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம்.

முல்லைப் பெரியாறு:

பிரதமரின் யோசனையின்பேரில் எனக்கும், கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும் இடையே, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.

அணையில் நீர்க்கசிவு ஏற்படுவது குறித்து கேரள தரப்பு பெரிதாக கவலை தெரிவித்தது. இதையடுத்து, அணையில் ஏற்படும் நீர்க் கசிவு குறித்து தமிழகம் மற்றும் கேரளா அல்லாத பிற மாநில பொறியாளர் குழுவை அமைத்து ஆராயலாம் என்ற யோசனையை நான் கேரள முதல்வரிடம் தெரிவித்தேன். அதை அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

மத்திய நீர் ஆணையம் மூலம் இந்த நடுநிலையான பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும். இது ஒரு முன்னேற்றமான நடவடிக்கை.

முதலில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு செல்ல நான் தயக்கம் காட்டினேன். கடந்த காலங்களில் நடந்த பேச்சுக்களால் எந்தப் பலனும் ஏற்படாததே எனது தயக்கத்திற்குக் காரணம். ஆனால் பிரதமர் வேண்டுகோளின்படியே இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டேன்.

மரண தண்டனைக்கு எதிர்ப்பு:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்க தேதி குறிப்பிட்டுள்ளது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

எனது பொதுவான கருத்து மரண தண்டனையே வேண்டாம் என்பதுதான். அதை நான் ஒருபோதும் ஏற்றவன் இல்லை. இதை பலமுறை சொல்லியுள்ளேன்.

புலிகளுக்கு நான் ஆதரவா?:

விடுதலைப் புலிகளுக்கு நான் தொடர்ந்து ஆதரவு தருவதாக இப்போது கூறி வரும் ஜெயலலிதா, அவரே சில காலத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியை படித்துப் தெளிந்து கொள்ளலாம்.

அந்தப் பேட்டியில், நானோ அல்லது எம்.ஜி.ஆரோ கொடுத்த ஆதரவில் ஒரு துளியளவு கூட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. இதிலிருந்ேத அவருடைய புகாருக்குரிய பதிலைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் தேனி வரை மட்டுமே வந்துள்ளது. அதையும் கூட நாங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டோம்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம், ஆதிக்கம் மிகவும் குறைவு.

நெல்லுக்கு ஆதார விலை:

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்த பட்ச ஆதரவு விலை தர வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தனது இயலாமையை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இரு முறை ஊக்கத் தொகையைக் கூட்டி தற்போது குவிண்டாலுக்கு ரூ. 825 கொடுத்து வருகிறது என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+