பாளை. சிறையில் மீண்டும் செல்போன்கள் சிக்கின
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் நடத்திய சோதனையில் மீண்டும் செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 ஆயிரத்து 500 கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் கடந்த 6 மாதங்களில் சுமார் 45 செல்போன்கள், 20 செல்போன் பேட்டரிகள், 30 ப்ரீபெய்டு சிம்கார்டுகள், 15 செல்போன் சார்ஜர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து சிறைத்துறை உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் பாளை மத்திய சிறையில் உள்சிறை மற்றும் வெளிசிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், ஜெயிலர்கள் நீஜாமுதின், அமிர்தலால், மற்றும் சிறை காவலர்கள் 50 பேர் நடத்திய இச்சோதனையில் உள்சிறையில் தண்டனை கைதிகள் உள்ள பிளாக், 2 மற்றும் 3வது பிளாக் அருகேயுள்ள கழிவறை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள், 2 செல்போன் சார்ஜர்கள், 2 சிம்கார்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து உள்சிறையில் விசாரணை கைதி பானுகுமாரிடமிருந்து ஒரு செல்போன், ஒரு சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். சிறையில் பலரிடம் செல்போன்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தீவிர சோதனை நடத்த சிறை துறையினர் முடிவு செய்துள்ளனர்.
எப்போது சோதனை நடந்தாலும் ஜெயிலுக்குள் புதையல் போல் செல்போன்கள் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் செல்போன்கள் புழக்கத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளை போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications