கொத்தனார் கொலை: கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
நாகர்கோவில்: தொழிலாளியை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மயிலோடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனோகரனுக்கும் பரம்பையை சேர்ந்த லலிதா என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் மனோகரன் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் லலிதாவிடம் விசாரணை நடத்தினர். லலிதாவுக்கும் சாக்கியன்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் பல ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. அதோடு அவர் மனோகரனிடமும் தொடர்பு வைத்திருந்தார்.
வெளிநாடு போயிருந்த ஸ்ரீகாந்த் ஊருக்கு வந்திருந்தார். அப்போது லலிதாவின் கணவர் வெளியூருக்கு சென்றதை அறிந்து, உல்லாசமாக இருக்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்ரீகாந்தும் லலிதாவும் உல்லாச போதையில் இருந்தனர்.
அந்த சமயத்தில் மனோகரன் அங்கு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஸ்ரீகாந்த் கோபமடைந்தார். ஆத்திரத்தில் பாய்ந்து வந்தவர் அங்கிருந்த கத்தியால் மனோகரனை வயிற்றில் சராமரியாக குத்தினார். அப்படியும் ஆத்திரம் தீராததால் அவரது கழுத்தையும் அறுத்தார்.
பின்னர் தனது நண்பர் சசிகுமார் மற்றும் லலிதா ஆகியோரின் உதவியுடன் உடலை ஒரு சாக்கில் கட்டி 4 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்தில் கொண்டு போய் புதைத்தனர்.
கத்தி மற்றும் ரத்தம் படித்த துணிகளை அருகில் உள்ள குளத்தில் வீசினர். போலீசார் கத்தி மற்றும் தூணிகளை கைப்பற்றினர். லலிதா, சசிகுமார், ஸ்ரீகாந்த ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications