விடுதலைப் புலிகள் விவகாரம்: ஜெ.வுக்கு திருமா கண்டனம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தரும் விவகாரம் தொடர்பாக தன்னை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியிருப்பது சுத்தப் பொய், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நானும், முதல்வர் கருணாநிதியும் பேசி வருவதாக ஜெயலலிதா பச்சைப் பொய்யைக் கூறியுள்ளார். அவரது பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
திமுக ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை. விடுதலைப் புலிகளைக் கண்டித்து பலமுறை முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் அந்த இயக்கத்தை திமுக அரசு ஆதரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தருவது என்பதற்கும், தார்மீக ஆரவு தருவதற்கும் உள்ள வித்தியாசத்தை ஜெயலலிதா உணர வேண்டும்.
மேலும், ஈழத் தமிழர்களுக்கு மானசீக ஆதரவு தருவதும், அனுதாபம் காட்டுவதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு ஆதரவு தருவதாக ஆகாது என்று பொடா மறு ஆய்வுக் குழு கூறியுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியது, அந்த அமைப்புக்கு ஆதரவான நிலை என்று கருத முடியாது. அது ஒரு மனிதாபிமான வெளிப்பாடு.
கருத்துச் சுதந்திர எல்லைக்கு உட்பட்டுத்தான், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் மானசீக ஆதரவு தருகிறோம்.
தமிழர்களைக் கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்துப் பேசுவோரையும், உயிரிழந்த அப்பாவித் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவோரையும் ஜெயலலிதா விமர்சிப்பது அவரது பாசிச மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.
ஜெயலலிதாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மனிதாபிமான சக்திகளையும் திரட்டி ஜனவரி 25ம் தேதி சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக கைதான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் அதே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட கருணாநிதிதான் காரணம் என ஜெயலலிதா கூறியிருப்பதை நான் மறுக்கிறேன். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்தே நான் விலகத் தயார் என்றார் திருமாவளவன்.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications