கூண்டுக்குள் குதித்த வாலிபரை கடித்து குதறிய புலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த புலிக் கூண்டுக்குள் திடீரென்று குதித்த பார்வையாளர் ஒருவரை புலி கடித்துக் குதறியது.
பீகார் மாநிலம் லோஹாதாவில் உயிரியல் பூங்கா உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுதிர்குமார் என்ற இளைஞர் புலிகள் அடைக்கப்பட்ட கூண்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் வெள்ளைப் புலி ஒன்று அடைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென்று சுதிர்குமார் புலிக் கூண்டுக்குள் குதித்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறினர். கூண்டுக்குள் குதித்த சுதிரை புலி கடித்துக் குதறி விட்டது. அவர் வெகுநேரம் புலியுடன் போராடினார்.
தகவல் அறிந்த உயிரியல் பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து புலிக் கூண்டுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு, புலியை வேறொரு கூண்டுக்குள் அடைத்தனர்.
புலியால் கடிபட்ட வாலிபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வனவிலங்கு அதிகாரிகள், அவர் மனநிலை சரியில்லாதவரா, எதற்காக புலிக் கூண்டுக்குள் குதித்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள மிருக காட்சி சாலையில் போட்டோ எடுக்க புலிக் கூண்டுக்குள் கையை விட்ட வாலிபரை 2 புலிகள் கடித்துக் கொன்றது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications