ஊட்டியில் சாலை, வீடுகளில் பிளவு - மக்கள் பீதி
ஊட்டி: ஊட்டியில் நேற்று திடீரென சாலையில் பெரும் பிளவு ஏற்பட்டது. வீடுகளிலும் விரிசல் விட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
ஊட்டி அருகே உள்ளது மேல்தலையாட்டு மந்து என்ற கிராமம். இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.
இந்த நிலையில், அண்ணா நகர், மூலன் நகர் பகுதியில் திடீரென 2 நாட்களுக்கு முன்பு நிலத்தில் திடீரென பிளவு ஏற்பட்டது. சாலையில் நீண்ட தூரத்திற்கு பிளவு ஏற்பட்டது. பல வீடுகளிலும் கூட விரிசல் ஏற்பட்டது.
இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். மேலும் பிளவு ஏற்பட்டபோது பெரும் சப்தமும் கேட்டதால் மக்கள் பெரும் பரபரப்படைந்தனர். என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் தாசில்தார், பூகோளவியல் நிபுணர்களுக்குத் தகவல் போனது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பிளவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
பிளவு ஏற்பட்டுள்ள சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிளவு ஏற்பட என்ன காரணம் என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications