மோடியை அனுமதிக்குமா அமெரிக்கா?
வாஷிங்டன்: 2 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா, இப்போது அவர் குஜராத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மீண்டும் அமெரிக்கா வர விரும்பினால் அமெரிக்க அரசு விசா வழங்குமா என்ற எதிர்பார்ப்பு அமெரிக்கா வாழ் குஜராத்திகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அங்குள்ள ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
இதையடுத்து முதலில் மோடிக்கு டூரிஸ்ட் விசா வழங்கப்பட்டது. ஆனால் திடீரென மோடியின் விசா ரத்து செய்யப்பட்டது. கோத்ரா வன்முறையைக் காரணம் காட்டி கொடுக்கப்பட்ட நெருக்குதல் காரணமாகவே மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது.
அமெரிக்க அரசின் இந்த செயல் அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்திகளிடையே பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. மத்திய அரசும், அமெரிக்க அரசின் செயலுக்கு தனது அதிருப்தியை தெரிவித்தது.
இந்த நிலையில் குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தி சமூகத்தினர் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
மோடி அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி வென்று விட்டார். அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்திகளை பெருமைப்படுத்தி விட்டார். மீண்டும் அவரை அமெரிக்காவுக்கு வரவழைத்து பாராட்டு விழா நடத்த நாங்கள் விரும்புகிறோம். இப்போதாவது அமெரிக்கா அவரைப் புரிந்து கொண்டு விசா வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு வேளை மோடி அமெரிக்கா செல்ல தீர்மானித்தால் அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications