2வது திருமணத்திற்கு மனைவி மறுப்பு-உயிரை விட்ட கணவன்
தூத்துக்குடி: 2வது திருமணத்திற்கு மனைவி அனுமதி மறுத்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கேவலம் தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அருகே நடந்தது. மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்த சேர்மலிங்கம்-ரூபணா சுந்தரி தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு ரூபணா சுந்தரி உடல் நிலை பாதிக்கப்பட்டு கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து 2வது திருமணம் செய்து ெகாள்ள திட்டமிட்டார் சேர்மலிங்கம். ஆனால், இதை மனைவி அனுமதிக்கவில்லை. இதையடுத்து சேர்மலிங்கம் விஷம் குடித்து விட்டு மாமியார் வீட்டிற்கு சென்றார்.
அங்கு மயங்கி விழுந்த சேர்மலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், சேர்மலிங்கம் இறந்து வெகுநேரமாகிவிட்டது எனக் கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications