காஞ்சிபுரத்தில் அரிசி மில் உரிமையாளர் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று காலையில் தனியார் அரிசி மில் உரிமையாளர் கண்ட துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற வந்தவர் படுகாயம் அடைந்தார்.
தனியார் அரிசி மில் உரிமையாளரான பரமசிவம் (55) இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவர் பரமசிவத்தை வழிமறித்து அரிவாள்களால் வெட்டினர்.
அப்போது அந்த வழியாக வந்த துரை என்பவர் பரமசிவத்தை காப்பாற்ற முயன்றார். ஆனால் கொலை வெறிக் கும்பல் துரையையும் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியது.
பலத்த காயமைடந்த பரமசிவத்தை போலீசார் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செனறனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். துரை பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பெரியய்யா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். போலீசார் தனிப் படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications