வடிவேலு மீது தாக்குதல்: விஜயகாந்த் டிரைவருக்கு முன்ஜாமீன்
சென்னை: நடிகர் வடிவேலு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் கார் டிரைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடிகர் வடிவேலுவின் அலுவலகம் முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக வடிவேலுவுக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் அடிதடியானது.
வடிவேலுவும், அவரது அலுவலகமும் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த்தின் மேலாளர், கார் டிரைவர் உள்ளிட்ட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கார் டிரைவர் முருகன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வேணுகோபால், முருகனுக்கு ரூ. 5000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
விசாரணை நடந்து வரும் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு தினசரி ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications