மேல்மருவத்தூரிலிருந்து திரும்பிய 4 பேர் வாகன விபத்தில் பலி
திருவண்ணாமலை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த 4 பக்தர்கள் திருவண்ணாமலை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தித்தாடப்பட்டு அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்த 30 பேர் 2 மினி ஆட்டோக்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் செங்கத்தை அடுத்துளள அம்மாபாளையம் மெயின் ரோட்டில் ஒரு ஆட்டோ மீது பெங்களூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த மாதேஸ்வரி (30), சம்பத் (30), பட்டம்மாள் (50) மற்றும் கல்யாணி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications